நீச்சல் பயிற்சிக்குச் சென்ற கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி பலி
கெலமங்கலம் அருகே நீச்சல் பயிற்சிக்குச் சென்ற கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் சங்கராச்சாரி இவரது மகன் ஸ்ரீநாத் இவர் ஓசூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்
இந்த நிலையில் இன்று மாலை அனுமந்தபுரம் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் நீச்சல் பயிற்சிக்காக சென்றுள்ளார் அப்போது அவர் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார் இதுகுறித்து அவரது தந்தை சங்கராச்சாரி கொடுத்த புகாரின் பேரில் கெலமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்