ஸ்ரீகனகதாசர் ஜெயந்திவிழா: தலைமீது தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

தேன்கனிகோட்டையில், ஸ்ரீகனகதாசரின் 534 வது ஜெயந்திவிழாவை முன்னிட்டு, தலைமீது தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2021-12-13 04:45 GMT

தேன்கனிக்கோட்டையில்,   ஸ்ரீகனகதாசரின் 534 வது ஜெயந்திவிழாயொட்டி,  தலை மீது தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள். 

கிருஷ்ணகிரி மாவட்டம்  தேன்கனிகோட்டையில்,  கவியரசர் ஸ்ரீகனகதாசரின் 534வது ஜெயந்திவிழாவை முன்னிட்டு, குரும்பர் இனமக்கள், தங்களது குல தெய்வங்களுக்கு,  பாரம்பரிய கலாச்சார முறைப்படி,  தலைமேல் தேங்காய்களை உடைத்து விநோத நேர்த்திக்கடனை செலுத்தினர்.

தேன்கனிகோட்டையில் குரும்பர் சங்கம் மற்றும் ஸ்ரீகனகஜோதி சேவா சமிதி சார்பில்,  கவியரசர் - ஸ்ரீகனகதாசரின் 534வது ஜெயந்திவிழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீகனகதாசர் பல்லக்கு மற்றும் குலதெய்வங்கள் அனைத்தும் குரும்பர் இனமக்களின் பாரம்பரிய கலாச்சார முறைப்படி,  டொல்லு குணிதா, வீரகாசை, வீரபத்ர குணிதா ஆகிய நடனங்களுடன் மேளதாளங்கள் முழங்க நகரின் வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்றனர்.

இதனை தொடர்ந்து,  வீரபத்ரசுவாமி, ஸ்ரீசிக்கம்மா சிவலிங்கேஸ்வரி தேவி, சிக்கவீரம்மா தேவி, லிங்கேஸ்வர சுவாமி உள்ளிட்ட பல்வேறு குல தெய்வங்களை வரிசையாக வைத்து பூஜை ஆட்டம், வீரமக்கள் ஆட்டம் மற்றும் சிறப்புபூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து குரும்பர் இனமக்கள், தங்களது  தலைமீது தேங்காய்களை உடைக்கும் பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை,  தலைமீது தேங்காய்களை உடைத்து விநோத வழிபாட்டை மேற்க்கொண்டனர். விழாவில் தேன்கனிக்கோட்டை, தளி, அஞ்செட்டி மற்றும் கர்நாடகா என 500க்கும் மேற்பட்ட குரும்பர் இனமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News