ஓசூர் அருகே கிராமப்பகுதியில் ஒற்றை யானை நடமாட்டம்: வனத்துறை எச்சரிக்கை
ஓசூர் அடுத்த ஜவளகிரி அருகே ஒற்றையானை கிராம பகுதிகளில் சுற்றித் திரிவதால் கிராம மக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர்.;
ஓசூர் அருகே கிராமப்பகுதியில் ஒற்றை யானை நடமாட்டம் வனத்துறை எச்சரிக்கை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த ஜவளகிரி அருகே ஒற்றையானை கிராம பகுதிகளில் சுற்றித் திரிவதால் கிராம மக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என வனத்துறைக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜவளகிரி அருகே உள்ள பால தொட்டனப்பள்ளி கிராமத்தின் அருகே இன்று காலை ஒற்றை யானை சுற்றித் திரிந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் ஒற்றை யானையை பட்டாசு வெடித்து வனப்பகுதிக்கு விரட்டினர்.
மேலும் கிராம மக்கள் பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். ஒற்றை யானை பால தொட்டனப் பள்ளி கொல்லப்பள்ளி பகுதிகளில் சுற்றிய பின் அருகே உள்ள வனப்பகுதிக்கு சென்றது.