நதியின் குறுக்கே மண் கொட்டி சாலை அமைத்த தனி நபர்: கண்டு கொள்ளாத அதிகாரிகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே நதியின் குறுக்கே மண் கொட்டி சாலை அமைத்துள்ள ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Update: 2022-01-29 10:00 GMT

நதியின் குறுக்கே மண் கொட்டி சாலை அமைத்துள்ள ஊராட்சி தலைவர் ராஜேஷ்

கெலமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பேலூர் கிராமப்பகுதியில், தனது பண்ணை வீட்டை அமைப்பதற்கு நிலங்களை சமப்படுத்த பாஜகவை சேர்ந்த ஜாக்கெரி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஷ்,  அருகில் உள்ள ஏரியில் இருந்து சட்டத்துக்கு புறம்பாக மண் அள்ளி விற்பனை செய்வதுடன், தனியர் நிலத்திற்கு செல்வதற்காக சநத்குமார் நதியின் குறுக்கே மண்ணை கொட்டி சாலை அமைத்துள்ளார். இதற்கு அந்த பகுதியில் கடுமையான எதிர்ப்பு வலுத்து வருகிறது.

வேலியே பயிரை மேய்ந்தது போல் ஜாக்கெரி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஷ் சட்டத்திற்கு புறம்பாக ஈடுபட்டுள்ளார். எனவே அவர்மீது  கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

நீர்நிலைகளை ஆக்கிரமிப்பது போதாதென்று, நீர்நிலைகளின் ஆதாரத்தையே முடக்கும் விதமாக நதியின் குறுக்கே மண்ணை கொட்டி சாலை அமைத்துள்ளது முற்றிலும் சட்டத்துக்கு புறம்பானது என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காலம்தால்தாமல் உடனடியாக சம்பந்தப்பட்டவார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர் 

Tags:    

Similar News