கெலமங்கலத்தில் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 1.10 லட்சம் திருட்டு

கெலமங்கலம் அருகே பள்ளி நிர்வாக அதிகாரி கார் கண்ணாடியை உடைத்து, 1 லட்சத்து, பத்தாயிரம் ரூபாயை மர்மநபர்கள் திருடி சென்றனர்.;

Update: 2021-07-09 06:15 GMT
கெலமங்கலத்தில் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 1.10 லட்சம் திருட்டு

சித்தரிக்கப்பட்ட படம்

  • whatsapp icon

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் புதிய ஏ.எஸ்.டி.சி., அட்கோ பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்,(41). கெலமங்கலம் தனியார் மெட்ரிக் பள்ளியில் நிர்வாக அதிகாரியாக உள்ளார்.

நேற்று முன்தினம் காலை, மத்திகிரி பகுதியில் உள்ள தனது  நிலம் விற்ற, 1லட்சத்து, பத்தாயிரம் பணத்துடன், மஹிந்திரா சைலோ வாகனத்தில் வந்து பள்ளி வளாகத்தில் நிறுத்தி சென்றுள்ளார். பள்ளி வேலைகளை முடித்து, மாலை திரும்பிய போது, தனது கார் கண்ணாடி உடைக்கப்பட்டிருப்பதையும், அதில் இருந்த பணம் திருடு போய் உள்ளதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து, கெலமங்கலம் போலீசில் புகார் அளித்தார். கார் கண்ணாடியை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து கெலமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News