தேன்கனிக்கோட்டையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தவர் கைது
தேன்கனிக்கோட்டையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.;
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெட்டமுகிலாலம் ஜெயபுரம் புதூர் பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
அதன்படி, தேன்கனிக்கோட்டை காவல் நிலைய போலீசார், ஒருவரின் வீட்டின் பின்புறம் சோதனை செய்த போது கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.
பின்னர் அந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 900 கிராம் கஞ்சாவை கைப்பற்றி காவல் நிலையம் வந்து வழக்குப் பதிந்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.