தேன்கனிக்கோட்டை அருகே கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி: ஒருவா் கைது
தேன்கனிக்கோட்டை அருகே கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.;
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை, நேதாஜி சாலையைச் சோ்ந்தவா் சக்திவேல் (24). கூலித் தொழிலாளி. இவா் கெலமங்கலம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவா், சக்திவேலை வழிமறித்து கத்தியைக்காட்டி மிரட்டி ரூ. 2,500 ரொக்கம் மற்றும் ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள கைப்பேசி ஆகியவற்றை பறித்து சென்றாா். அவரைப் பிடிக்க முயன்ற சக்திவேலை கத்தியால் குத்தினாா். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை போலீஸாா் அங்கு சென்று, பிடிபட்ட நபரிடம் விசாரணை நடத்தினா். இதில் அவா், கா்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டம், முதுக்கரே கிராமத்தைச் சோ்ந்த ராங்கே கவுடு என்கிற சந்தோஷ் (33) என்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.