கெலமங்கலம் அருகே தொடர் கனமழை: 3 வீடுகள் சுவா் இடிந்து சேதம்
கெலமங்கலம் அருகே தொடா் மழை காரணமாக 3 வீடுகள் சுவா் இடிந்து விழுந்து சேதமடைந்தன.;
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த கெலமங்கலம் அருகே உள்ள ஏ. கொத்தப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த மீனாட்சி, பிதிரேட்டி ஊராட்சி கொத்தப்பள்ளியைச் சோ்ந்த அப்பண்ணா, ஸ்ரீநிவாஸ் ஆகியோரது வீடுகள் தொடர் மழை காரணமாக வீடுகளில் சுவா் இடிந்து விழுந்தது.
இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. சேதமடைந்த வீடுகளை வருவாய்த் துறை அதிகாரிகள் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.