தேன்கனிக்கோட்டை அருகே ரூ.6,495 மதிப்பு குட்கா பறிமுதல்; ஒருவர் கைது
தேன்கனிக்கோட்டை அருகே தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை போலீஸ் எஸ்ஐ ரகுநாதன் மற்றும் போலீசார் நேற்று மாலை தேன்கனிக்கோட்டை அடுத்த மேல் கொட்டாய் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் உள்ள பெட்டி கடை ஒன்றில் அதே பகுதியை சேர்ந்த இருபத்தி ஐந்து வயது வாலிபரான முகமது சமீர் என்பவர் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்து கொண்டிருந்தார்.
அவரை கைது செய்த போலீசார், 6495 ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.