தேன்கனிக்கோட்டை அருகே ஏரியில் முகாமிட்ட மூன்று யானைகள்
தேன்கனிக்கோட்டை அருகே ஏரியில் முகாமிட்டிருந்த மூன்று காட்டு யானைகளை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டியடித்தனர்
தேன்கனிக்கோட்டை அருகே ஏரியில் முகாமிட்டிருந்த மூன்று காட்டு யானைகளை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டியடித்தனர்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள திம்மசமந்திரம் வனப்பகுதியில் இருந்து வந்த 3 யானைகள் நேற்று முன் தினம் இரவு திம்மசந்திரம் பகுதியில் விவசாய நிலங்களில் புகுந்து தக்காளி முட்டைகோஸ் பீன்ஸ் உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்தது. பின்னர் லிங்கதீரணபள்ளியில் நேற்று முகாமிட்டிருந்தன. இதையடுத்து நேற்று இரவு விவசாய நிலங்களுக்குச் சென்று கிராம மக்கள் யானைகள் ஏரியில் முகாமிட்டுள்ளதை பார்த்து தேன்கனிகோட்டை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சென்ற வனச்சரக அலுவலர் சுகுமார் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் பட்டாசு வெடித்து ஏரியில் இருந்த மூன்று காட்டு யானைகளை விரட்டினர். அப்பொழுது ராகி தோட்டத்தின் வழியே சென்ற யானைகள் ராகி பயிரை காலால் மிதித்து நாசம் செய்த படி மீண்டும் திம்பசந்திரம் வனப்பகுதிக்கு சென்றன.