குடும்ப தகராறில் இருசக்கர வாகனம் தீ வைத்து எரிப்பு, விவசாயி கைது

கே.ஆர்.பி.அணை அருகே குடும்ப தகராறில் இருசக்கர வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டது. இது தொடரபாக விவசாயி கைது செய்யப்பட்டார்.

Update: 2021-08-18 16:00 GMT

குடும்ப தகராறில் எரிக்கப்பட்ட இரு சக்கர வாகனம்.

கிருஷ்ணகிரி இட்டிக்கல் அக்ரஹாரம் பக்கமுள்ள எர்ரபையனபள்ளியை சேர்ந்தவர் சின்னசாமி கட்டிட மேஸ்திரி. கிருஷ்ணகிரி அருகே உள்ள சின்ன பெல்லராம்பள்ளியை சேர்ந்தவர் மொழுகப்பன் .விவசாயி. இவர் சின்னசாமியின் தங்கையின் கணவர் ஆவார்.

இவர்களுக்குள் குடும்ப பிரச்சினை இருந்தது. இந்த நிலையில் நேற்று முன் தினம் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக பேசுவதற்காக சின்னசாமி, மொழுகப்பனை பார்க்க சென்றார்.

அந்த நேரம் ஏற்பட்ட பிரச்சினையில் ஆத்திரம் அடைந்த மொழுகப்பன், சின்னசாமியின் இருசக்கர வாகனத்தை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தார்.

இதில் இருசக்கர வாகனம் முழுமையாக எரிந்து சேதமடைந்தது. இது குறித்து சின்னசாமி நேற்று கொடுத்த புகாரின் பேரில் கே.ஆர்.பி.அணை போலீசார் இன்று வழக்கு பதிவு செய்து மொழுகப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News