சாலையில் நடந்து சென்றவர் மீது பைக் மோதி பலி
அஞ்செட்டி அருகே சாலையில் நடந்து சென்றவர் மீது பைக் மோதி உயிரிழந்தார்
அஞ்செட்டி அருகே சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தவர் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அடுத்த சேசுராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவர் நேற்று மாலை சேசுராஜபுரம் அருகே உள்ள கவுண்டர் கொட்டாய் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த பைக் இவர் மீது மோதியது. இதில் ஆரோக்கியசாமி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து அஞ்செட்டி போலீஸ் எஸ்.ஐ.செல்வம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.