3 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்
அஞ்செட்டி அருகே கேட்பாரற்று கிடந்த 3 நாட்டுத் துப்பாக்கிகளை பறிமுதல் செய்த போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அடுத்த நாற்றாம்பாளையம் சாலையில் உள்ள கேரட்டி பகுதியில், நேற்று மாலை அஞ்செட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்பொழுது கேரட்டி வனப்பகுதியை ஒட்டி சாலையோரம் கேட்பாரற்று கிடந்த 3 நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.