தேன்கனிக்கோட்டை அருகே 10ம் வகுப்பு மாணவி கடத்தல்: இரு குழந்தைகளின் தந்தை கைது
தேன்கனிக்கோட்டை அருகே பத்தாம் வகுப்பு மாணவியை கடத்திய இரண்டு குழந்தைகளின் தந்தையை போலீசார் கைது செய்தனர்;
கிருஷ்ணகிரி மாவட்டம், மதகொண்டபள்ளி அடுத்த அம்பேத்கர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் தர்மன். இவருக்கு மம்தா என்பவருடன் திருமணமாகி ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் மதகொண்டபள்ளி அம்பேத்கர் காலனி பகுதியில் இருந்த பத்தாம் வகுப்பு படிக்கும் 14 வயது பள்ளி மாணவியை திருமணம் செய்யும் நோக்கில் கடத்திச் சென்றுள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் எஸ்ஐ., கஜலட்சுமி நேற்று வழக்கு பதிவு செய்து டாட்டா ஏஸ் டிரைவரான தர்மன் என்பவரை கைது செய்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.