கிருஷ்ணகிரி: மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான கொரோனா தடுப்பூசி முகாமில், 105 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

Update: 2021-06-18 04:36 GMT

பர்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில், மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. 

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில், மாற்றுத்திறனாளிகளுக்குமுன்னுரிமை வழங்க வேண்டும் என்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடந்த கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

முகாமினை, கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தொடங்கி வைத்தார். இதில் 65 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதேபோல் பர்கூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமில் 105 மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் கூறுகையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் அமைக்கப்படும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமினை, மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி கொண்டு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என்றார். 

Tags:    

Similar News