நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் நாளை 14 இடங்களில் தடுப்பூசி முகாம்
நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் நாளை 14 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.;
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக நாகர்கோவில் மாநகராட்சி சார்பிலும் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள், மாற்று திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள் உட்பட்டோருக்கு பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
அதன் படி, நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் நாளை (23/08/2021) 14 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
மாநகராட்சி பகுதியில் நடைபெறும் தடுப்பூசி மையங்கள், தடுப்பூசி இருப்பு, டோக்கன் உள்ளிட்ட விவரங்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.