குமரியில் குடியிருப்புகளுக்குள் புகுந்த மழை வெள்ளம் - மக்கள் பாதிப்பு
குமரியில் கனமழையால், குடியிருப்புக்குள் மழை நீர் புகுந்தது. வெள்ளம் சூழந்ததால், குழந்தைகளுடன் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில், நேற்று இரவு முதல், விடிய விடிய பெய்த கனமழையின் காரணமாக, மாவட்டம் முழுவதும் சாலையில் மழை வெள்ளம், ஆறு போல் ஓடுகிறது.
நாகர்கோவில் அருகே ஆசாரிபள்ளம் பகுதியில் அமைந்துள்ள சலோம் நகர் பகுதியில் குடியிருப்புகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. இதன் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்துள்ளனர், மழைவெள்ளம் வழிந்தோட தேவையான வசதிகள் இல்லாத நிலையில் குழந்தைகளுடன் பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இப்பகுதியில் மழைநீர் வடிகால் சீரமைக்கும் முகாம் நடைபெற்றது. அப்போது மழை நீர் வழிந்தோட தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் தற்போது மழை பெய்துள்ள நிலையில், வெள்ளம் வெளியேறாமல் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.