வாட்ஸ் அப்பில் பெண்ணிடம் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியவர் கைது
குமரியில், வாட்ஸ் அப்பில் பெண்ணிடம் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியவர் கைது செய்யப்பட்டார்.;
கன்னியாகுமரி மாவட்டம் இலவுவிளை பகுதியை சேர்ந்த பெண்ணிடம் ஆபாசமாக ஒருவர் தொடர்ந்து குறுஞ்செய்தி அனுப்பி வந்துள்ளார். இதுதொடர்பாக அந்த பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் அவர்களிடம் புகார் மனு அளித்தார். அந்த புகார் மனு மீது விசாரணை நடத்த மாவட்ட காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.
அதன்படி மார்த்தாண்டம் காவல் நிலைய போலீசாரின் தீவிர விசாரணையில் பெண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பியது வெட்டு காட்டுவிளை பகுதியை சேர்ந்த சிவகுமார் (36) என்பது தெரியவந்தது. உடனே மார்த்தாண்டம் காவல் நிலைய ஆய்வாளர் செந்திவேல் குமார் குற்றவாளி சிவகுமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.