கனமழை - சிதறால் பகுதியில் 20 க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம்

குமரியில் கனமழை காரணமாக சிதறால் பகுதியில் 20 க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது.

Update: 2021-11-13 00:30 GMT

மழையால், வீட்டை சூழ்ந்துள்ள வெள்ளம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக,  மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அணைகள் முழு கொள்ளளவை எட்டியதால் அணையில் இருந்து 3100 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் மற்றும் மழை நீர் காரணமாக, தாமிரபரணி ஆறு, பரளிஆறு, கோதையாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால், குழித்துறை சப்பாத்து பாலம் முழுவதுமாக மூழ்கும் அளவிற்கு தண்ணீர் செல்கிறது. ஆற்றின் கரையோரம்,  தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள்,  பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தி உள்ள மாவட்ட நிர்வாகம்,  ஆற்றில் குளிக்கவும், செல்பி எடுக்கவும் தடைவிதித்து உள்ளது.

இந்நிலையில்,  திக்குறிச்சி, மங்காடு, வைக்கலூர் போன்ற பகுதிகளில் உள்ள சாலையில்,  மழைநீர் தேங்கி உள்ளது, இதனால் இந்த பகுதியில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது; அத்துடன்,  25 க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

Tags:    

Similar News