வயதான தம்பதியின் வீடு இடிப்பு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கன்னியாகுமரியில் வயதான தம்பதியின் வீட்டை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை.;

Update: 2021-07-06 17:20 GMT

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பகுதியை சேர்ந்தவர் தங்கையன். 72 வயது முதியவரான இவர் தனது மனைவியுடன் தனக்கு சொந்தமான வீட்டில் சிறிய வீட்டில் குடியிருந்து வந்தார்.

இதனிடையே இவரது வீட்டை பக்கத்து வீட்டை சேர்ந்த சிலர் அபகரிக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது, இந்நிலையில் தங்கையன் கண் அறுவை சிகிச்சைக்காக கேரளா சென்று விட்டு திரும்பிய போது தங்கையன் குடியிருந்த வீட்டை மர்ம நபர்கள் இடித்து தரைமட்டமாக்கி இருப்பது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து தனது மனைவியுடன் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த தங்கையன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

அதில் தான் குடியிருந்த வீட்டை இடித்து தரைமட்டம் ஆக்கிய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கூறி இருந்தார், மேலும் வீட்டை தரைமட்டம் ஆக்கியதுடன் தனது மனைவியின் 5 பவுன் தங்க நகை, சான்றிதழ்கள், வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் காணாமல் போனதால் தற்போது நடுத்தெருவில் நிற்பதாக கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்தார்.

Tags:    

Similar News