100 நாள் பணி வழங்க கோரி பயனாளிகள் வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அவளூர் கிராமத்தில் 100 நாள் பணி வழங்க கோரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Update: 2024-07-04 09:23 GMT

காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை 100 நாள் பணி மீண்டும் வழங்க கோரி அவளூர் கிராம பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அவளூர் கிராம பொதுமக்கள் 100 நாள் வேலை வாய்ப்பு மீண்டும் வழங்க கோரி , காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஊராட்சியிலும் ஒவ்வொரு பயனாளிக்கும் 100 நாட்கள் பணி வழங்கி கடந்த காலங்களில் ஊராட்சி நல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது.


தற்போது பணி நாட்கள் குறைந்துள்ள காரணங்களால் பல்வேறு கிராம ஊராட்சிகளில் பணி வழங்க இயலாத நிலை உள்ளது. அவ்வகையில் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அவளூர் கிராமத்தில் 1500 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் நிலையில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் அதிக அளவு பயனாளிகள் பணிபுரிந்து வருகின்றனர்.

ஆனால் தற்போது நாள் ஒன்றுக்கு 40 முதல் 50 பணியாளர்களுக்கு மட்டுமே பணி வழங்கப்படுகிறது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கிராம 100 நாள் பயனாளிகள் இன்று காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை 100க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு மீண்டும் அனைவருக்கும் பணி வழங்க கோரிக்கை வைத்தனர்.


இதனைத் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் கோமளா அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி பணி வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மரக்கன்று திட்டங்களில் அதிக அளவில் மக்கள் பயன்பெற வேண்டும் எனவும், அதற்குண்டான தொகையும் அவர்களது வங்கி கணக்கில் வைக்கப்படும் என்பதும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டுமென கூறி விரைவில் இத்திட்டத்தில் அனைவரும் இணைந்து கொள்ளுங்கள் என தெரிவித்தார்.

இருப்பினும் பொதுமக்கள் சமாதானம் அடையாமல் தங்களுக்கு 100 நாள் வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என கூறியதின் அடிப்படையில் விரைவில் அப்பகுதியில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் வரும் திங்கட்கிழமை 100 நாள் வேலை வாய்ப்பு வழங்காவிடில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News