நசியனூர் மனுநீதி நாள் முகாமில் 100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
ஈரோடு மாவட்டம் நசியனூரில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா 100 பயனாளிகளுக்கு ரூ.63.45 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்;
நசியனூரில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, குறைகளை கேட்டறிந்த ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா.
நசியனூரில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா 100 பயனாளிகளுக்கு ரூ.63.45 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை இன்று (18ம் தேதி) வழங்கினார்.
ஈரோடு மாவட்டம் நசியனூர் கிராமம் அம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா 100 பயனாளிகளுக்கு ரூ.63.45 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முன்னதாக, இம்முகாமில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கிடும் வகையில் வேளாண்மை-உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளையும் பார்வையிட்டார்.
இம்முகாமில், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, ஈரோடு வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன், நசியனூர் பேரூராட்சி தலைவர் மோகனபிரியா, துணைத் தலைவர் பத்மநாதன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.