ஈரோடு வந்த கோவை - பெங்களூர் வந்தே பாரத் ரயிலுக்கு பா.ஜ.,வினர் வரவேற்பு..!
ஈரோடு ரயில் நிலையம் வந்தடைந்த கோவை பெங்களூர் வந்தே பாரத் ரயிலுக்கு பா.ஜ., சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஈரோடு ரயில் நிலையம் வந்தடைந்த கோவை பெங்களூர் வந்தே பாரத் ரயிலுக்கு பா.ஜ., சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேக் இன் இந்தியா' திட்டத்தின்கீழ் உள்நாட்டுத் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் பல பகுதிகளில் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சென்னை கோவை, சென்னை- திருநெல்வேலி, சென்னை- மைசூரு ஆகிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கோவை - பெங்களூரு இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக சனிக்கிழமை (இன்று) துவக்கி வைத்தார். இந்த ரயில் ஈரோடு ரயில் நிலையத்திற்கு பகல் 1.30 மணிக்கு வந்தடைந்து, 1.35 மணிக்கு புறப்பட்டு சென்றது.
இதனிடையே, ஈரோடு ரயில் நிலையம் வந்தடைந்த வந்தே பாரத் ரயிலுக்கு பயணிகள், பொதுமக்கள், பாஜக தொண்டர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி, தெற்கு மாவட்ட பாஜக தலைவர் வேதானந்தம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும், இந்த ரயிலானது வரும் ஜனவரி 1ம் தேதி முதல் காலை 5 மணிக்கு கோயம்புத்தூரில் இருந்து புறப்பட்டு, 11.30 மணிக்கு பெங்களூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தையும், மறு மார்க்கமாக, பிற்பகல் 1.40 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்பட்டு, இரவு 8 மணிக்கு கோவை சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது.