செவித்திறன் குறையுடையோருக்கான அரசு பள்ளியில் காலிப் பணியிடம்..!

செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-01-19 12:30 GMT

காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலை பள்ளியில் காலியாக உள்ள முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஈரோடு அடுத்துள்ள ஆர்.என்.புதூரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இயங்கும் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலை பள்ளியில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் - 3, பட்டதாரி ஆசிரியர் - 3, துணை விடுதிக்காப்பாளர் - 1 ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளது.

எனவே, பள்ளி மேலாண்மைக் குழு மூலம் முற்றிலும் மதிப்பூதிய முறையில் தற்காலிகமாகவும் நிபந்தனையின் அடிப்படையிலும் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்கான ஊதியம் முதுகலை பாட ஆசிரியருக்கு ரூ.18,000 மற்றும் பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.15,000, துணை விடுதிக்காப்பாளருக்கு ரூ.12,000 வழங்கப்படும். பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலைப் பாட ஆசிரியர் மற்றும் துணை விடுத்திக்காப்பாளர் பணியிடங்களுக்கு உரிய கல்வித் தகுதிகளுடன் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி:- 

முதுகலை பாட ஆசிரியர்:- MA Tamil, B.Ed (Special Education) or MA Tamil, B.Ed and SDTD Senior Diploma in Teaching for DEAF ), M.com Commerce B.Ed (Special Education) M.com Commerce, B.Ed and SDTD Senior Diploma in Teaching for DEAF), Computer Science MSC or MCA B.Ed (Special Education) or MSC or MCA and B.Ed with SDTD Senior Diploma in Teaching for DEAF).

பட்டதாரி ஆசிரியர்:-  Maths, Bsc or Msc B Ed, (Special Education) or Bsc or Msc Maths, B.Ed, and Senior Diploma in Teaching for DEAF, Science Bsc or Msc (Special Education) or Bsc or Msc, B.Ed, and Senior Diploma in Teaching for DEAF), BA or MA Tamil B.Ed (Special Education) or BA or MA Tamil, BEd and SDTD Senior Diploma in Teaching for DEAF).

துணை விடுதிக் காப்பாளர்:- D.T.Ed, Junior Diploma in Teaching for HI (or) D.Ed, (Special Education) ஆகும்.

விண்ணப்பித்தினை உரிய கல்வித்தகுதி சான்றிதழ்களுடன் வருகிற 22ம் தேதி மாலை 5.30 மணிக்குள் தலைமை ஆசிரியர், செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி, ஆர்.என்.புதூர், ஈரோடு - 5 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News