கோபிசெட்டிபாளையம் அருகே கஞ்சா வைத்திருந்த 2 இளைஞர்கள் கைது

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சிங்கிரிபாளையத்தில் கஞ்சா வைத்திருந்த இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-06-28 11:15 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கடத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட  சிங்கிரிபாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பையில் கஞ்சா வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த  திலீப்குமார் (19), மாக்கணாங்கோம்பை பகுதியை சேர்ந்த விஜய் (21) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 100 கிராம் அளவுள்ள கஞசாவை போலீசார் பறிமுதல் செய்தனர். 

Tags:    

Similar News