தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது பெற விண்ணப்பிக்கலாம்: ஈரோடு ஆட்சியர் தகவல்..!

தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது பெற தகுதியான தனி நபா்கள், நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Update: 2024-01-10 12:00 GMT

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம்.

தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது பெற தகுதியான தனி நபா்கள், நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறையின் கீழ், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்களுக்கு அதாவது தனிநபர்கள், நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், குடியிருப்போர் நலச்சங்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகளுக்கு தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது மற்றும் தலா ரூ.1 லட்சம் வீதம் 100 தனி நபர்கள், அமைப்புகளுக்கு வழங்கப்படவுள்ளது.

அதன்படி, 2023- 2024ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் மூலமாக வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்ப படிவத்தை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய இணையதளமான < http://www.tnpcb.gov.in >ல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் ஈரோடு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை அணுகலாம்.

மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய இணைப்புகளுடன் ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு வரும் ஏப்ரல் 15ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News