கொடுமுடி அருகே சாலைப்புதூர் பகுதியில் 30 நாய்கள் பிடிப்பு
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள சாலைப்புதூர் பகுதியில் 30 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு சனிக்கிழமை (இன்று) அப்புறப்படுத்தப்பட்டன.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள சாலைப்புதூர் பகுதியில் 30 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு சனிக்கிழமை (இன்று) அப்புறப்படுத்தப்பட்டன.
ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே சென்னசமுத்திரம் பேரூராட்சிக்குட்பட்ட சாலைப்புதூரில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன. இந்த தெரு நாய்களால் போக்குவரத்துக்கு இடையூறும், பொதுமக்களுக்கு அச்சமும் ஏற்பட்டு வந்தது. எனவே தெருவில் சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடித்து அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை (நேற்று) அப்பகுதியை சேர்ந்த 13 பேரை தெரு நாய் ஒன்று கடித்தது. இதில் காயம் அடைந்த 13 பேரும் கொடுமுடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரிலும், பொதுமக்களின் தொடர் புகாரின் அடிப்படையிலும், தெரு நாய்களின் தொல்லைகளை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் மதுரையிலிருந்து தெரு நாய் பிடிப்பவர்கள் வாகனத்துடன் அழைத்து வரப்பட்டு உரிமையாளர்கள் மற்றும் பராமரிப்பின்றி சுற்றித்திரியும் சுமார் 30 தெரு நாய்களை சனிக்கிழமை (இன்று) பிடித்துச் சென்றனர்.