கார்த்திகை தீபம் : ஈரோட்டில் இருந்து தி.மலை - பழனிக்கு சிறப்பு பேருந்துகள்..!

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில், ஈரோட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

Update: 2023-11-23 11:00 GMT

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஈரோடு மண்டலம் சாா்பில், திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக ஈரோடு பேருந்தில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு.

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில், ஈரோட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

கார்த்திகை தீபம் வரும் ஞாயிற்றுக் கிழமை அதாவது நவம்பர் மாதம் 26ம் தேதி வழக்கமான பிரமாண்டமான ஏற்பாடுகளுடனும் பாதுகாப்புடனும் திருவண்ணாமலையில் நடைபெறவுள்ளது.

இத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் செல்வது வழக்கம். இதற்காக பக்தர்களின் வசதிக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அதன்படி, ஈரோட்டில் இருந்தும் திருவண்ணா மலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல் பழனி முருகன் கோவிலுக்கும் பக்தர்கள் செல்வதால் அங்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஈரோடு மண்டல பொதுமேலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

வருகின்ற கார்த்திகை தீபம் திருவிழாவினை முன்னிட்டு, பயணிகள் வசதிக்காக 25.11.2023 முதல் 27.11.2023 முடிய ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலை மற்றும் பழனிக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், ஈரோடு மண்டலம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.  

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News