மொடக்குறிச்சி அடுத்த சிவகிரியில் ரேஷன் அரிசி கடத்தல்: இருவர் கைது

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த சிவகிரியிலிருந்து காங்கேயத்திற்கு 440 கிலோ ரேஷன் அரிசியை ஆம்னி வேனில் கடந்த முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-12-21 03:00 GMT

ஆம்னி வேனில் ரேஷன் அரிசி கடத்தியதாக கைதான சுப்ரமணி, ஜெயப்பிரகாஷ்.

மொடக்குறிச்சி அடுத்த சிவகிரியிலிருந்து காங்கேயத்திற்கு 440 கிலோ ரேஷன் அரிசியை ஆம்னி வேனில் கடந்த முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த சிவகிரி காவல் எல்லைக்குட்பட்ட விளக்கேத்தி நால்ரோடு பகுதியில் பகுதியில் ரேஷன் அரிசியை விற்பனை செய்வதற்காக கடத்தி செல்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதன்பேரில், மாவட்ட குடிமை பொருள் வழங்கல் - குற்றப்புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் பன்னீர்செல்வன், காவல் உதவி ஆய்வாளர் மூர்த்தி தலைமையிலான போலீசார் அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக சந்தேகப்படும் படியாக வந்த ஆம்னி வேனை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த, வேனில் அதில் 11மூட்டைகளில் 440 கிலோ ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வேனில் இருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் திருப்பூர் மாவட்டம், காங்கயம் நடுப்பாளையம் மாந்தபுரத்தை சேர்ந்த செந்தில் என்ற சுப்ரமணி (வயது 36), மற்றொருவர் அதே மாவட்டம் சேரம்பாளையத்தை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் (வயது 37) என்பது தெரியவந்தது.

இவர்கள் இருவரும் பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி, காங்கயம் பகுதியில் தங்கியுள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வதற்காக வேனில் கடத்தி செல்வதை ஒப்புக் கொண்டனர். இதைத்தொடர்ந்து செந்தில் என்ற சுப்ரமணி, ஜெயப்பிரகாஷ் இருவரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 440 கிலோ ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News