எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி: ஈரோடு மாவட்டத்தில் பள்ளி தூய்மைப் பணிகள்..!
எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி' திட்டத்தின் கீழ், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் நேற்று (ஜன.8) முதல் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி' திட்டத்தின் கீழ், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் நேற்று (ஜன.8) முதல் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசின் மக்கள் நலன் காக்கும் பல்வேறு சிறப்பு திட்டங்கள் துவங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சமுதாய நலன் மற்றும் மாணவர் நலனிற்காக துவக்கப்பட்டுள்ள சிறப்பு திட்டம் தான் "எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" என்ற சிறப்பு திட்டம். பள்ளிக்கல்வி துறையின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து வகையான அரசு பள்ளிகளிலும் கடந்த 2023 ஜனவரி 9ம் தேதி முதல் இத்திட்டத்தை செயல்படுத்த அரசு உத்தரவிட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து, "எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" திட்டத்தின் சிறப்பு செயல்பாடாக சிறப்புப் பள்ளி தூய்மைப் பணி செயல்பாடுகள் பள்ளி மேலாண்மைக் குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், முன்னாள் மாணவர்கள் மன்றம், தன்னார்வலர்கள் ஆகியோரைக் கொண்டு சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இச்சிறப்பு தூய்மைப் பணியானது ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும், சிறப்பாகச் செயல்படுத்தி அனைத்துத் துறையினரையும் ஒருங்கிணைத்து குழு செயல்பட்டு வருகிறது. அதனடிப்படையில், "எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி” திட்டத்தின்கீழ், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் சிறப்புத் தூய்மைப் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணியானது, நேற்று (ஜன.8) முதல் நாளை (ஜன.10) வரை நடைபெறுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.