ஈரோடு மாநகராட்சி அலுவலக மாடியிலிருந்து குதித்து தூய்மை பணியாளர் தற்கொலை முயற்சி

ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 2ம் நாளாக இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-11-01 13:45 GMT

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தின் மேலிருந்து ஒப்பந்த தூய்மை பணியாளர் தற்கொலை முயற்சி. 

ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்களில் 60 வார்டுகளில் தூய்மை பணியாளர்கள் 1,500க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், தமிழக நகராட்சி நிர்வாக இயக்குநர் அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளுக்கு விடுத்த சுற்றறிக்கையில் மாநகராட்சி, நகராட்சிகளில் அடிப்படை சேவை பணிகள், திடக்கழிவு மேலாண்மை பணிகள், குடிநீர் வழங்கல் மற்றும் தொடர்புடைய கட்டமைப்புகளை இயக்கி பராமரித்தல், கழிவு நீர், அகற்றுதல், தெரு விளக்குகளை பராமரித்தல் போன்ற பணிகளை அவுட்சோர் சிங் முறையில்' ஒப்பந்த முறையில் மேற்கொள்ள அறிவுறுத்தியது.

இதை எதிர்த்தும், அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர் கள் பணியை புறக்கணித்து நேற்று மாநகராட்சி அலுவலக வளாகத்தில் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், கமிஷனர் சிவகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, உங்களது கோரிக்கை தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும் என உறுதியளித்தனர். மேலும் மாநகராட்சி மாமன்ற கூட்டத்திலும், மேயர். துணை மேயர் உட்பட 60 கவுன்சிலர்களும் தற்காலிக தூய்மை பணியாளர்கள் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் நேற்று மாலை கலைந்து சென்றனர்.

இந்நிலையில், இன்று 2வது நாளாக தற்காலிக தூய்மை பணியாளர்கள் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட ஒருங்கிணைப்பாளர்களில் கூறுகையில், தமிழக அரசு தனியார் நிறுவனம் மூலம் தூய்மை பணி களை மேற்கொள்ளும் என்ற உத்தரவை திரும்ப பெறும் வரை, நாங்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். இந்த போராட்டத்தில் 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற தால், மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் குப்பை கள், சாக்கடை அடைப்பு கள் அகற்றப்படவில்லை.ஈரோடு மாநகர் பகுதியில் நாள் ஒன்றுக்கு 70 டன் வரை குப்பைகள் சேரும். அதனை அந்தந்த மண்டலத்துக்கு ஒதுக்கப்பட்ட தூய்மை பணியாளர்கள் வீடு, வீடாக சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து எடுத்து செல்வார்கள்.

ஆனால் இந்த பணி 2 நாட்களாக நடைபெறாததால் குப்பைகள் குவிந்துள்ளன. கிட்டத்தட்ட 140 டன் குப்பைகள் வரை குவிந்துள்ளது. இதனால், மாநகராட்சி அடிப்படை பணிகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி உள்ளது என்றார். இந்நிலையில், மாநகராட்சி ஒப்பந்த துப்புரவு ஊழியர் மோகன்ராஜ் என்பவர் மாநகராட்சி அலுவலகம் மீது ஏறி தற்கொலைக்கு முயன்று உள்ளார். இதனை அடுத்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட சக ஊழியர்கள் மற்றும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவரை பத்திரமாக மீட்டனர்.  இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News