ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் குடியரசு தின விழா..!

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் நாட்டின் 75வது குடியரசு தின விழா வெள்ளிக்கிழமை (இன்று) கொண்டாடப்பட்டது.

Update: 2024-01-26 11:15 GMT

குடியரசு தின விழாவில், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் தாளாளர் தங்கவேல், முதல்வர் வாசுதேவன் ஆகியோர் வழங்கினர்.

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் நாட்டின் 75வது குடியரசு தின விழா வெள்ளிக்கிழமை (இன்று) கொண்டாடப்பட்டது.

இந்தியாவுக்காக உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. 1947 ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிரிட்டிஷாரிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றது. முன்னதாக இந்தியாவுக்கான அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்க குழு அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.

2 ஆண்டு, 11 மாதம் 18 நாட்களில் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு 1950 ஜனவரி 26 ஆம் தேதி நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த நாளையே ஆண்டுதோறும் இந்திய குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, நாடு முழுவதும் இன்று 75வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து, நாடே குடியரசு தின கொண்டாட்டத்தால் கோலாகலமாக காணப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் 75வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு, கல்லூரியின் முதல்வர் வாசுதேவன் முன்னிலை வகித்தார். கல்லூரியின் தாளாளர் தங்கவேல் தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து, கல்லூரியின் தேசிய மாணவர் படையின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவின் இறுதியில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News