ஆப்பக்கூடல் அருகே செம்மறி ஆடு திருடிய வாலிபர்கள் கைது
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே செம்மறி ஆடு திருடிய 2 வாலிபர்களை போலீசரை கைது செய்தனர்.;
ஆப்பக்கூடல் அருகே செம்மறி ஆடு திருடிய 2 வாலிபர்களை போலீசரை கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள வேம்பத்தி தாளக்குட்டைப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 56). இவரது தோட்டத்தில் கட்டி இருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செம்மறி ஆட்டை இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து செல்வராஜ் ஆப்பக்கூடல் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்பேரில், காவல் உதவி ஆய்வாளர் கார்த்தி வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தார்.
இந்த நிலையில் அந்தியூர் அருகே உள்ள கரட்டூர்மேடு பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் 2 பேர் இருசக்கர வாகனத்தில் 2 ஆடுகளை வைத்து சென்று கொண்டிருந்தனர். விசாரணையில் அவர்கள் பவானி பகுதியை சேர்ந்த மதியழகன் (வயது 25), பவானி வர்ணபுரம் பகுதியை சேர்ந்த கௌரிசங்கர் (22) ஆகியோர் என்பதும், இவர்கள் வைத்திருந்தது செல்வராஜிடம் இருந்து திருடப்பட்ட ஆடுகள் என்பதும் தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.