ஈரோடு மசாஜ் சென்டரில் விபசாரம்: 3 பேர் கைது; 6 பெண்கள் மீட்பு
ஈரோடு மசாஜ் சென்டரில் விபசாரம் நடத்திய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து, 6 பெண்களை மீட்டனர்.;
ஈரோடு மசாஜ் சென்டரில் விபசாரம் நடத்திய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து, 6 பெண்களை மீட்டனர்.
ஈரோடு சம்பத் நகர் நால்ரோடு அருகே கீரின் ஸ்பா என்ற பெயரில் இயங்கும் மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதன்பேரில், ஈரோடு வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், எஸ்ஐ பழனிசாமி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு அங்கு அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.
இதில், 6 பெண்களை. வைத்து விபசாரம் நடத்தி வந்ததது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மசாஜ் சென்டரில் பணியாற்றி வந்த சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த ரவிக்குமார் (வயது 30), திருச்சி மாவட்டத்தை சேர்ந்த விமல்ராஜ் (வயது 30), சால்வின்சகோ (வயது 30) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், விபசாரத்திற்கு ஈடுபடுத்தப்பட்ட பெண்களை போலீசார் மீட்டு அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ஸ்பாவின் உரிமையாளரான கரூர் மாவட்டத்தை சேர்ந்த. சுமன்சிவா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.