தேசிய வாக்காளர் தினம்: ஈரோடு ஆட்சியர் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்பு

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்று கொண்டனர்.;

Update: 2024-01-24 10:00 GMT

தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு தின உறுதிமொழியினை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்கள் ஏற்றுக் கொண்டனர்.

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்று கொண்டனர்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் தேதி தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற வேண்டும் மற்றும் வாக்குப்பதிவு நாளில் அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டும் என எடுத்துரைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது.

அதன்படி, இந்த ஆண்டு தேசிய வாக்காளர் தினம் நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஈரோடு மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ராஜ கோபால் சுன்கரா தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர். 

18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற வேண்டும் மற்றும் வாக்குப்பதிவு நாளன்று அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்குமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார் , செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில்குமார், அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News