ஈரோட்டில் 'நான் முதல்வன்' திட்ட கருத்தரங்கு : கூடுதல் தலைமை செயலாளர் பங்கேற்பு..!

ஈரோட்டில் ‘நான் முதல்வன்' திட்ட கருத்தரங்கு கூடுதல் தலைமை செயலாளர் உமாசங்கர் தலைமையில் நடந்தது.

Update: 2023-11-16 03:57 GMT

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் நான் முதல்வன் திட்ட கருத்தரங்கு கூடுதல் தலைமை செயலாளர் உமாசங்கர் தலைமையில் நடந்தபோது எடுத்து படம்.

ஈரோட்டில் ‘நான் முதல்வன்' திட்ட கருத்தரங்கு கூடுதல் தலைமை செயலாளர் உமாசங்கர் தலைமையில் நடந்தது.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சார்பில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ், தொழில்துறை நிறுவனங்கள், அரசுத்துறை அலுவலர்கள் மற்றம் தொழில்நுட்ப மாணவர்கள் கலந்துகொள்ளும் ஒரு நாள் பயிற்சி வகுப்பிற்கான நிரல் திருவிழா கருத்தரங்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில், தொழில்முனைவோர் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளரும், இயக்குநருமான உமாசங்கர் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தொழில்முனைவோர் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் உமாசங்கர் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சரால், நான் முதல்வன் நிரல் திருவிழா கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளை கொண்டு தொடரும் சிக்கல்களை தீர்க்கவும் நமது மாணவர்களிடம் புத்தாக்கத்தை தூண்டுவதே நிரல் திருவிழா நோக்கமாகும். இது அனைத்து தொழில்நுட்ப மாணவர்கள் படிப்புகளில் இறுதியாண்டு திட்டமாக கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், ஈரோடு மாவட்டத்தில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தொழில்துறை நிறுவனங்கள் அரசு துறை அலுவலர்கள் மற்றும் தொழில்நுட்ப மாணவர்கள் கலந்து கொள்ளும் ஒரு நாள் பயிற்சி வகுப்பிற்கான நிரல் திருவிழா பயிற்சி கருத்தரங்கம் நடைபெறுகிறது. இத்திட்டத்தின் மூலம் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றவர்களை நாடாமல் தாங்களாகவே தங்கள் புராஜெக்ட் ரிப்போர்ட் செய்கின்ற நிலைக்கு உயர்த்தப்படுவர்.

எனவே ஒவ்வொரு திட்டத்தின் கீழ் சிறப்பான பயிற்சி பெற வேண்டும். நீங்கள் செய்யும் புராஜெக்ட் ரிப்போர்ட் அனைத்தும் பள்ளி மாணவ, மாணவர்களிடம் வழங்கப்படும். இதன் மூலம் பள்ளி மாணவ, மாணவியர்கள் இது தொடர்பான சந்தேகங்களை கேட்டு தெரிந்துகொள்வார்கள்.

மேலும், அக்ரிடெக் உணவுத் தொழில்நுட்பம், சுத்தமான பசுமை தொழில்நுட்பம், உடற்பயிற்சி, விளையாட்டு, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் / பயோடெக்/ ஹெல்த், புதுப்பிக்கத்தக்க மற்றும் நிலையான ஆற்றல், எஸ்மார்ட் நகரம், கிராமப்புற வளர்ச்சி, ஸ்மார்ட் வாகனங்கள், தொழிற்துறை 4.0 போன்ற துறைகளில் சார்பில் புத்தாக்க பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் இவ்வாய்ப்பினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு தாங்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் ஏற்படும் சவால்கள் மற்றும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என மாணவ, மாணவியர்களுக்கும் அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியரும், திட்ட இயக்குநருமான மணிஷ், மாவட்ட வருவாய் அலுவலர் லதா (பொ), உதவி இயக்குநர் (மாவட்ட திறன் பயிற்சி) ஜெயக்குமார் உட்பட பல்வேறு அரசு துறை சார்ந்த அலுவலர்கள், தொழில்துறையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News