அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கோவிலில் வைத்திருந்த வெள்ளிக் குடத்தை திருட முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2024-04-25 02:45 GMT

கைது செய்யப்பட்ட சரவணன்.

Erode News , Erode Today News, Erode Live News - அந்தியூர் அருகே கோவிலில் வைத்திருந்த வெள்ளிக் குடத்தை திருட முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் செம்புளிச்சாம்பாளையத்தில் செல்லியாண்டியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் குண்டம் விழா நேற்று நடைபெற்றது. குண்டம் விழாவில் பக்தர்கள் தீ மிதித்ததும், அம்மனுக்கு பூஜை செய்யப்பட்டது.

இவ்விழாவுக்கு சுவாமி அலங்காரம் செய்வதற்காக நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் திருவள்ளுவர் வீதியைச் சேர்ந்த சரவணன் (வயது 42) வந்திருந்தார். அப்போது, சுவாமிக்கு அலங்காரம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது சுவாமி சிலைக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த வெள்ளிக் குடத்தை சரவணன் திருட முயன்றுள்ளார்.

இதைப் பார்த்த பக்தர்கள் அவரைப் பிடித்து அந்தியூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

கோவில் விழாவில் சுவாமிக்கு அலங்காரம் செய்ய வந்தவரே சுவாமிக்கு முன்பு வந்திருந்த வெள்ளிக் குடத்தை திருடிய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News