ஆசனூரில் பட்டியல், பழங்குடியின இளைஞர்களுக்கான ஓட்டுநர் பயிற்சி முகாம் துவக்கம்

சத்தியமங்கலம் அடுத்த ஆசனூரில் பட்டியல், பழங்குடி இளைஞர்களுக்கான ஓட்டுநர் பயிற்சி முகாமினை எம்.பி. ஆ.ராசா துவக்கி வைத்தார்.

Update: 2023-12-09 06:15 GMT

பட்டியல் பழங்குடி இளைஞர்களுக்கான ஓட்டுநர் பயிற்சி முகாமினை எம்.பி. ஆ.ராசா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ஆசனூர் வனக்கோட்டத்தில் பட்டியல், பழங்குடி இளைஞர்களுக்கான ஓட்டுநர் பயிற்சி முகாமினை எம்.பி. ஆ.ராசா துவக்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனக்கோட்டத்தில், பட்டியல் பழங்குடி இளைஞர்களுக்கான ஓட்டுநர் பயிற்சி முகாமினை நீலகிரி எம்.பி. ஆ.ராசா துவக்கி வைத்தார்.

பின்னர், இந்நிகழ்வில், அவர் தெரிவித்ததாவது:- காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் 12 மலைவாழ் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு சூழல் மேம்பாட்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவில் உள்ள பட்டியல் பழங்குடி இளைஞர்கள் 60 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு ஓட்டுநர் பயிற்சி வழங்கும் முகாம் ஆசனூர் வனக்கோட்டத்தில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

ஓட்டுநர் பயிற்சியில் ஈடுபடும் பட்டியல் பழங்குடி இளைஞர்கள் கல்வியின் அவசியத்தை உணர்ந்து பெரிய படிப்பையெல்லாம் விட்டு விடாக்கூடாது. நீங்கள் மருத்துவராக வேண்டும், படித்து இந்திய வனப்பணி, இந்திய ஆட்சிப்பணி ஆகிய பணிகளுக்குச் செல்ல வேண்டும். பட்டியல் பழங்குடி மக்கள் பல்லாண்டு காலமாக காட்டை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

எனவே அந்தந்த வனப்பகுதியிலேயே உங்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இப்பயிற்சியில் கலந்து கொண்டு ஓட்டுநர் உரிமம் பெறும் பட்டியல் பழங்குடி இளைஞர்களுக்கு வனத்துறையிலேயே வேலை வாய்ப்பை வழங்குவதற்கு அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்கும். மேலும், ஓட்டுநர் பயிற்சி மற்றும் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான மொத்த தொகையையும் காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் வழங்கப்படும், என்றார்.

இந்த ஆய்வின்போது, சத்தியமங்கலம் புலிகள் காப்பக ஆசனூர் வனக்கோட்ட துணை இயக்குநர் சுதாகர் உட்பட வனத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News