ஈரோடு மாவட்டத்தில் விசைத்தறிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை

ஈரோடு மாவட்டத்தில், 40 ஆயிரம் விசைத்தறிகளுக்கு தீபாவளி பண்டிகைக்காக 10 நாட்கள் விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது;

Update: 2021-11-03 07:30 GMT

கோப்பு படம் 

ஈரோடு மாவட்டத்தின்  பல்வேறு பகுதிகளில், 40 ஆயிரம் விசைத்தறிக்கு மேல் இயக்கப்படுகிறது. கடந்த நான்கு மாதங்களாகத்தான் முழுஅளவில் விசைத்தறிகள் இயக்கத்துக்கு வந்தன. நாளை தீபாவளி கொண்டாடப்படும் நிலையில், விசைத்தறிக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து,  தமிழ்நாடு விசைத்தறி சங்க கூட்டமைப்பு செய்தி தொடர்பாளர் கந்தவேல் கூறியதாவது: தீபாவளி ஜவுளித்தேவைக்காக, கடந்த நான்கு மாதமாக இரவு, பகலாக விசைத்தறிகள் இயங்கி வந்துள்ளன. தீபாவளி பண்டிகைக்காக நேற்று முன்தினம் இரவு நிறுத்தம் செய்து,  பத்து தினங்கள் விடுமுறை விடுத்துள்ளனர். ஆனாலும், அரசின் இலவச வேட்டி, சேலை பணி நடந்து வருகிறது. வரும், 15ம் தேதிக்குப் பின்னரே முழு அளவில் தறிகள் இயக்கத்துக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News