நம்பியூர் திட்டமலை அரசு கலை அறிவியல் கல்லூரியில் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி..!
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள திட்டமலை அரசு கலை அறிவியல் கல்லூரியில் உயர்கல்வி படிக்க வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நம்பியூர் அருகே உள்ள திட்டமலை அரசு கலை அறிவியல் கல்லூரியில் உயர்கல்வி படிக்க வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த நம்பியூர் அருகே உள்ள திட்டமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் சார்பாக நம்பியூர் சுற்றியுள்ள பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி படிக்க வழிகாட்டும் நிகழ்ச்சி புதன்கிழமை (இன்று) நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் சூரியகாந்தி தலைமை தாங்கி தலைமை உரையாற்றினார். விழாவிற்கு வணிகவியல் துறை தலைவர் நாகேந்திரன் வரவேற்புரை ஆற்றினார்.
கணிதத் துறைத் தலைவர் மற்றும் இணைப் பேராசிரியர் தமிழ்மணி கணிதத் துறை சார்ந்த உயர்கல்வி வழிகாட்டி சிறப்புரை ஆற்றினார். வணிக நிர்வாகவியல் துறை தலைவர் மற்றும் இணைப் பேராசிரியர் யூனஸ் வணிக நிர்வாகவியல் துறை சார்பாக உயர்கல்வி வழிகாட்டல் சிறப்புரை ஆற்றினார். வணிகவியல் துறைத் தலைவர் மற்றும் உதவிப் பேராசிரியர் நாகேந்திரன் வணிகவியல் தொடர்பான உயர் கல்வி வழிகாட்டும் சிறப்புரை ஆற்றினார்.
கணினி அறிவியல் துறைத் தலைவர் மற்றும் உதவிப்பேராசிரியர் வரதராஜன் கணினி அறிவியல் துறை சார்பாக உயர்கல்வி சார்ந்த சிறப்புரை ஆற்றினார். பொருளியல் துறைத் தலைவர் மற்றும் உதவிப் பேராசிரியர் ராஜ்குமார் பொருளியல் துறை சார்பாக உயர்கல்வி சார்ந்த சிறப்புரை ஆற்றினார். விழாவில் இறுதியாக தமிழ்த்துறை கௌரவ விரிவுரையாளர் சரஸ்வதி நன்றியுரை கூறினார்.
விழாவினை கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.