கோபி தொகுதி மக்களுக்காக உயிரை பணயம் வைக்க தயார்:செங்கோட்டையன் உருக்கம்

தன்னை 8 முறை தேர்ந்தெடுத்த கோபி தொகுதி மக்களுக்காக உயிரை பணயம் வைக்கத்தயாராக இருப்பதாக செங்கோட்டையன் எம்எல்ஏ பேசினார்

Update: 2023-09-17 09:15 GMT

கோபியில் நடைபெற்றஅண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார், முனனாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்

என்னை 8 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்தெடுத்த கோபி தொகுதி மக்களுக்காக என் உயிரை பணயம் வைக்க கூட தயாராக உள்ளேன், என கோபிசெட்டிபாளைத்தில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ செங்கோட்டையன் உருக்கமாக பேசினார்

கோபிசெட்டிபாளையம் லக்கம்பட்டியில் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணா வின் 115 வது பிறந்த நாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில்  பங்கேற்ற முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட செயலாளர் கேஏ செங்கோட்டையன், பேசியதாவது.

திராவிட இயக்கம் தான் என்றைக்கும் தமிழ் மண்ணில் நிலைத்து நிற்கும் இயக்கம் என்பதை உறுதிபடுத்தியவர் அண்ணா. அவரது அமெரிக்க பயணத்தில் ஆற்றிய முக்கால் மணிநேர உரையின் மூலம் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர். அவர் வழியில் வந்தவர் தான் எம் ஜி ஆர்.அவர் ஆட்சி காலத்தில் எண்ணற்ற திட்டங்களை பொதுமக்களுக்காக நிறைவேற்றினார்.

.நான் 1977-ல் சத்தியமங்கலத்தில் முதன் முதலில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன், அதற்குப் பிறகு எட்டு முறை என்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்துள்ளீர்கள். அதற்காக கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன், கோபி தொகுதி என்னை வாழ வைத்த மண், கோபி தொகுதி மக்களுக்காக என் உயிரை பணயம் வைக்க கூட தயாராக உள்ளேன். பெண்கள் முன்னேற்றத்திற்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார்,ஜெயலலிதா இருக்கும் வரை அவர்தான் நிரந்தர முதலமைச்சர் வரலாற்றை படைத்தார். ஆறு மொழிகள் பேசக்கூடிய ஒரே தலைவி அவரது ஆட்சி காலம் பொற்காலம் ,அவரது ஆட்சி காலத்தை எதிர்கால ,இந்தியாவை திரும்பிப் பார்க்கின்ற அளவுக்கு உருவாக்கிய பெருமைக்குரியவர்

தற்போது மின்சார கட்டணம் விண்ணை தொடும் அளவிற்கு உள்ளது, வீட்டு வரி உயர்த்தப்பட்டுள்ளது பால் விலை உயர்ந்துள்ளது, திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து விலைவாசிகளும் உயர்ந்துள்ளது.ஆனால் எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சியில் எந்த வரியும் ஏற்றாமல் நல்லாட்சி நடத்தினர், ஆகையால் ஆட்சியை மாற்ற நேரம் எப்போது வரும் என மக்கள் எதிர் பார்த்து கொண்டுள்ளனர்..

ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தாலும் இல்லாவிட்டாலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாண்டிச்சேரி உட்பட 40 நாடாளுமன்ற தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றிபெறும். சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக கோட்டையில் அமரும் என்றார் கேஏ.செங்கோட்டையன்.

கூட்டத்தில்  சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி, நிர்வாகிகள் சத்தியபாமா, கந்தவேல், முருகன், வழக்கறிஞர் மெளதீஸ்வரன், தம்பி சுப்பிரமணியம், பிரினியோகணேஷ்,  குறிஞ்சிநாதன். அன்னக்கொடி, ரவிச்சந்திரன், முத்துரமணன், அருள், ராமசந்திரன்,. வேலுமணி, முத்துகுமார், பாண்டுரங்கசாமி, வேலுச்சாமி உட்பட கலந்து கொண்டனர்

Tags:    

Similar News