கோபி அருகே மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு

கோபிச்செட்டிப்பாளையம் அருகே மின்சாரம் தாக்கியதில் பெண் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-11-12 11:15 GMT

உயிரிழந்த திலகவதி.

கோபிச்செட்டிபாளையம் வடக்கு தெரு ராமர் எக்ஸ்டென்சன் பகுதியை சேர்ந்தவர் தீனதயாளன்( வயது 55). இவரது மனைவி திலகவதி (வயது 42). இவர்களுக்கு சற்குணா (வயது 17), அபர்ணா (வயது 15) என்ற 2 மகள்கள் உள்ளனர். நேற்று வீட்டில் இருந்த திலகவதி தண்ணீர் தொட்டி அருகில் தண்ணீர் பிடிக்க சென்ற போது மின்மோட்டாரை இயக்கினார். அப்போது திடீரென திலகவதி மீது மின்சாரம் தாக்கியது. இதையடுத்து அவரை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது திலகவதியை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News