அதிகரிக்கும் கொரோனா : ஈரோட்டில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்

ஈரோட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்று காரணமாக மாவட்டம் முழுவதும் அலுவலகங்கள், தெருக்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2021-04-23 10:47 GMT

ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் கொரோனா வேகம் எடுத்துள்ளது. கடந்த 4 நாட்களாக தினசரி பாதிப்பும் 200- ஐ கடந்து சென்றுள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, சுகாதார பணியாளர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர மாவட்டம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

ஈரோடு மாநகராட்சி சார்பில் கடந்த சில நாட்களாக மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளிலும் மண்டலங்கள் வாரியாக பிரித்து,  மாநகராட்சி பணியாளர்கள் வீடு, கடைகள், வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்களில் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர்.

அரசு அலுவலகமான தபால் நிலையங்கள், ஒவ்வொரு தெருக்கள் வீடுகளுக்குச் சென்று மாநகராட்சி பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர். இதைப்போல் அந்தியூர், பவானி, சத்தியமங்கலம், பெருந்துறை, மொடக்குறிச்சி, கோபி மாவட்டம் முழுவதும் சுகாதார பணியாளர்கள் நோய் தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளித்து வருகின்றனர்.

Tags:    

Similar News