மின் சிக்கனம் பற்றிய விழிப்புணர்வு வார விழா நிறைவு

ஈரோட்டில் மின் சிக்கன வார விழாவை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன

Update: 2023-12-20 17:00 GMT

ஈரோட்டில் நடைபெற்ற மின் சிக்கன விழிப்புணர்வு வார விழா

மின் சிக்கனம் பற்றிய விழிப்புணர்வு வார விழா ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தில் கொண்டாடப்படுவதை முன்னிட்டு இந்த வருடத்திற்கான (டிசம்பர்-14 முதல் 20-வரை) மின் சிக்கன விழிப்புணர்வு வார விழா ஈரோடு மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர்  மு.கலைச்செல்வி  தலைமையில்; மின் சிக்கனம் பற்றிய விழிப்புணர்வு வகுப்புகளை வேளாளர் பொறியியல் கல்லூரி மாணவ மாணவியர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இதில், செயற்பொறியாளர் சூ. மரியா ஆரோக்கியம்  மின்சார சிக்கனம்,  பற்றிய விழிப்புணர்வு கருத்துகளை எடுத்துரைத்தார். பொறியாளர் கி. சாந்தி மின் விபத்துக்கள் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு  கருத்துகளை எடுத்துரைத்தார்.

நிகழ்வில், வேளாளர் பொறியியல் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் மற்றும் நகரிய கோட்ட மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவ்விழாவில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்களுக்கு மின்சார சிக்கனத்தின் தேவை குறித்த செய்திகள் அடங்கிய கையேடுகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

மேலும் இதே போன்று 19.12.2023 அன்று மதியம் 3.  மணியளவில் ஈரோடு கொல்லம்பாளையத்தில் உள்ள இரயில்வே காலனி மேல் நிலை பள்ளியில் சுமார் 150 மாணவ மாணவிகள் முன்னிலையில் மின்சார சிக்கனம், பாதுகாப்பு மற்றும் மின் விபத்துகள் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு விழா மேற்பார்வை பொறியாளர்  மு.கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது.  இவ்விழாவிற்கு . செயற்பொறியாளர் கே.நாச்சிமுத்து மற்றும்; இரயில்வே காலனி மேல் நிலை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆற்றல் மன்ற ஓருங்கிணைப்பாளர் மற்றும் தெற்கு கோட்ட மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவ்விழாவில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்களுக்கு மின்சார சிக்கனத்தின் தேவை குறித்த செய்தியினை அடங்கிய கையேடுகள், மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து,  20.12.2023 இன்று காலை 9.30மணியளவில் நடைபெற்ற விழிப்புணர்வு  பேரணியை மேற்பார்வை பொறியாளர் மு.கலைச்செல்வி  கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில், ஈரோடு செயற்பொறியாளர்கள் பொது, நகரியம், தெற்கு மற்றும் பெருந்துறை, ஈரோடு மின் பகிர்மான வட்டம், ஈரோடு மற்றும் மின் வாரிய பொறியாளர்கள் அலுவலர்கள் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

இப்பேரணியானது பெருந்துறை துடுப்பதி பிரிவில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் இயக்குதலும், காத்தலு் பெருந்துறை  அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு குன்னத்தூர் சாலை வழியாக அண்ணாசிலை வரை  நடைபெற்றது. இதில், மின்வாரிய அலுவலர்கள் ஊழியர்கள் மாணவ மாணவிகள் மற்றும் தன்னார்வளர்கள் சுமார் 200- பேர்  கலந்து கொண்டனர்.

இதேபோல, மின் சிக்கன வார விழாவின் ஒரு பகுதியாக ஈரோடு மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட உபகோட்டங்களின் சார்பாக அலுவலர்கள்; இ பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தன்னார்வளர்கள் கலந்து கொண்ட மின்சார சிக்கன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட பொது மக்களிடையே மின்சார சிக்கனம்,  பாதுகாப்பு மற்றும் மின் விபத்துக்கள் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அது குறித்த ஒலிபெருக்கி மூலம் செய்திகளை மின்வாரிய வாகனம் மூலமாக பொதுமக்களுக்கு பேரணி செல்லும் வழிகளில் பிரச்சாரம் செய்யப்பட்டது. பொது மக்கள், நுகர்வோர் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு மின்சார சிக்கனத்தின் தேவை குறித்த செய்தியினை அடங்கிய கையேடுகள், மற்றும் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.



Tags:    

Similar News