ஈரோடு மாவட்ட அரசு இசைப்பள்ளியில் சர்வதேச குழந்தைகள் தின விழா

ஈரோடு மாவட்ட அரசு இசைப்பள்ளியில் சர்வதேச குழந்தைகள் தினம் உலக மாணவர் தின விழா நடைபெற்றது

Update: 2023-11-22 13:00 GMT

யூத் ஹாஸ்டெல்ஸ் சார்பில் ஈரோடு மாவட்ட அரசு இசைப்பள்ளியில் சர்வதேச குழந்தைகள் தினம் மற்றும் உலக மாணவர்கள் தின விழா நடைபெற்றது.

யூத் ஹாஸ்டெல்ஸ் சார்பில் ஈரோடு மாவட்ட அரசு இசைப்பள்ளியில் சர்வதேச குழந்தைகள் தினம் மற்றும் உலக மாணவர்கள் தின விழா நடைபெற்றது.

யூத் ஹாஸ்டெல்ஸ் அஸோசியேஷன் ஆப் இந்தியா கொங்கு கிளையின் பவளவிழா ஆண்டின் இருபத்தைந்தாவது நிகழ்வாக சர்வதேச குழந்தைகள் தினம் , சர்வதேச மாணவர்கள் தினம் மற்றும் சர்வதேச ஆண்கள் தின விழா என முப்பெரும் விழா ஈரோடு மாவட்ட அரசு இசைப்பள்ளியில் தலைமையாசிரியர் ரவிராசு தலைமையில் நவம்பர் 22 அன்று காலை 9 மணிக்கு நடைபெற்றது. யூத் ஹாஸ்டெல்ஸ் மாநில துணைத் தலைவர் டாக்டர். ராஜா முன்னிலை வகித்தார்.

முன்னதாக பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியை கங்காநாயுடு வரவேற்புரையாற்றினார். பள்ளியின் நாதஸ்வர ஆசிரியர் " இசை வளர்மணி " சங்கரன் உலக குழந்தைகள் தின சிறப்புரையாற்றினார். பின் பள்ளியின் மிருதங்க ஆசிரியர் " இசை மாமணி " குமார் உலக மாணவர்கள் தினத்தையொட்டி சிறப்புரையாற்றினார். பின் உலக ஆண் தின சிறப்புரையை குரலிசை ஆசிரியை " இசை மாமணி "விஜயா வழங்கினார்.

விழாவில் சேர்மன் டாக்டர். ஐயப்பன் மற்றும் தவில் ஆசிரியர் வேல்முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழஙகினாரகள். போட்டியில் வெற்றிபெற்ற மாணவ மாணவியரகளுக்கு துணைத் தலைவர் சுகுமார் பரிசுகளையும் மற்றும் இசைப்பள்ளி மாணவன் சல்மானுக்கு இலவசமாக வயலின் ஒன்றும் வழங்கினார். நிறைவாக பள்ளியின் தேவாரம் ஆசிரியர் ஞானப்பிரகாசம் நன்றியுரையாற்றினார்.

இந்த விழாவில் இசைப்பள்ளி மாணவ மாணவியகள் மற்றும் உறுப்பினரகள் பங்கு பெற்றனர். இந்த நிகழ்வை கிளையின் தலைவர் சந்திரா தங்கவேல் மற்றும் தலைமை ஆசிரியர் ரவிராசு ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags:    

Similar News