நான் முதல்வன் தொலை நோக்குத் திட்டத்தின் கீழ் போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி
இலவச வகுப்புகள், தேர்வுகள், பாடப் புத்தகங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளது.;
தமிழ்நாடு முதல்வரின் நான் முதல்வன் தொலை நோக்குத் திட்டத்தின்கீழ் ஒன்றிய அரசின் பணிகள் தேர்வு, வங்கி எஸ்எஸ்சி போட்டித் தேர்வுகளுக்காக இலவச பயிற்சி வகுப்புகள் வரும் 25.05.2023 அன்று ஈரோடு இரயில்வே காலனி, மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தொடங்கப்படவுள்ளது.
இந்த பயிற்சி திட்டத்தின் மூலம் தகுதியுடையவர்களுக்கு இலவச வகுப்புகள், தேர்வுகள், பாடப் புத்தகங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளது.இலவச வகுப்புகள், தேர்வுகள், பாடப் புத்தகங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளது.
கல்வித்தகுதி: குறைந்தபட்சம்-ஏதேனுமஒரு இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வோண்டும். வயது வரம்பு- குறைந்த பட்சம் - 21 அதிகபட்சம் 35 வரை.
விண்ணப்பிக்கும் முறை -விண்ணப்பதாரர்கள் பின்வரும் இணைப்பின் வாயிலாக 20.05-2023 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். https://candidate.tnskill.tn.gov.in/CE-NM/TNSDC_REGISTRATION.ASPX
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி- 10.05.2023.ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் தேதி-11.05.2023. விண்ணப்பத்தை சமர்பிப்பதற்கான கடைசி தேதி-20.05.2023.தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் பட்டியல் வெளியீடு- 23.06.2023. பயிற்சி வகுப்பு தொடங்கும் தேதி-25.05.2023. எனவே, ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த ஆண் / பெண் இரு பாலர்களும் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணானுண்ணி கேட்டுக்கொண்டுள்ளார்.