ஈரோட்டில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்..!
ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பிரகாஷ் தலைமையில் வியாழக்கிழமை (இன்று) நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில், ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் கூடுதல் ஆணையருமான (வருவாய் நிருவாகம்) பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கின்ற வகையிலும், தமிழ்நாடு முதலமைச்சரின் செயல்பாட்டிற்கு உறுதுணையாகவும் இருக்கின்ற வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து தங்களது பணியினை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பிரகாஷ் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் செல்வராஜன் (வளர்ச்சி), கணேஷ் (பொது), இணை இயக்குநர் (வேளாண்மை - உழவர் நலத்துறை) முருகேசன் (பொ), திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) மைக்கேல், இணை இயக்குநர் (பொது சுகாதாரம்) அம்பிகா, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) சோமசுந்தரம் உட்பட அனைத்து துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.