சாலையில் கிடந்த தங்கதாலிக்கொடி காவல்நிலையத்தில் ஒப்படைத்த நபருக்கு பாராட்டு

சாலையில் கிடந்த தங்க தாலிக்கொடியினை காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபருக்கு காவல் நிலைய துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பாராட்டு.

Update: 2022-01-26 14:30 GMT

நகையை மீட்டுக் கொடுத்த ருக்குமணிக்கு பவானி காவல் நிலைய துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பாராட்டு தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் பவானி செங்காடு பகுதியை சேர்ந்தவர் கோகிலா. கடந்த 2 நாட்களுக்கு முன்பு, கோகிலா கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்க தாலிக்கொடி காணாமல் போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் இதுகுறித்து பவானி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் பவானி காடையம்பட்டி பகுதியை சேர்ந்த பவானி ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் கோபால் இவரது மனைவி ருக்குமணி என்பவர் சாலையில் மூன்றரை பவுன் நகை கிடந்ததாகக் கூறி பவானி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இதுகுறித்து கோகிலாவிற்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த அவர் இது தனது நகைதான் என கூறியதை அடுத்து அவரிடம் மூன்றரை பவுன் தங்க தாலிக்கொடி ஒப்படைக்கப்பட்டது. மேலும் தொலைத்த நகையைப் பத்திரமா மீட்டுக் கொடுத்த ருக்குமணிக்கு நன்றி தெரிவித்து பாராட்டினார். இதுகுறித்து அறிந்த பவானி காவல் நிலைய துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் நகையை மீட்டுக் கொடுத்த ருக்குமணி காவல் நிலையம் அழைத்து பாராட்டு தெரிவித்தார். மேலும் பலரும் அவருக்குப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News