பவானி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு..!
பவானி அரசு மருத்துவமனையில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா சனிக்கிழமை (இன்று) திடீர் ஆய்வு நடத்தினார்.
பவானி அரசு மருத்துவமனையில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா சனிக்கிழமை (இன்று) திடீர் ஆய்வு நடத்தினார்.
ஈரோடு மாவட்டம் பவானி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா திடீர் ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின்போது, பவானி அரசு மருத்துவமனையில் செயல்படும் பல் மருத்துவப் பிரிவு, மருந்து கிடங்கு விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, சமையல் அறை, மகப்பேறு பிரிவு, இரத்த சேமிப்பு மையம், சலவை அரங்கு, ஆண் மற்றும் பெண்கள் பிரிவு, நுண்கதிர் பிரிவு, இசிஜி பிரிவு, ரத்த மாதிரி சேகரிப்பு பகுதி, மருந்தகம், உள்நோயாளிகள் பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, மக்களை தேடி மருத்துவம், கர்ப்பப்பை பரிசோதனை அறை ஆகிய பிரிவுகளை நேரில் சென்று பார்வையிட்டார்.
அப்போது, உள்நோயாளிகள் எண்ணிக்கை, புற நோயாளிகள் எண்ணிக்கை, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் எண்ணிக்கை குறித்தும், மருத்துவமனைக்கான தேவைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும், அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின்போது, பவானி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் உடனிருந்தனர்.