அந்தியூர் அருகே ரூ.1 லட்சம் மதிப்பிலான துணிகள் திருட்டு

அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசத்தில் துணிக்கடை ஒன்றில் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள துணிகள் திருடப்பட்டது இன்று (திங்கட்கிழமை) காலையில் தெரியவந்தது.;

Update: 2023-03-20 11:30 GMT
அந்தியூர் அருகே ரூ.1 லட்சம் மதிப்பிலான துணிகள் திருட்டு

பைல் படம்.

  • whatsapp icon

அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசத்தில் துணிக்கடை ஒன்றில் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள துணிகள் திருடப்பட்டது இன்று (திங்கட்கிழமை) காலையில் தெரியவந்தது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசம் புதூர் பகுதியை சேர்ந்தவர் கேசவன் (45). இவர், பிரம்மதேசம்பாலம் அருகே ஆயத்த ஆடை வைத்துள்ளார். இந்நிலையில், இன்று அதிகாலை 3.45 மணியளவில் அந்த வழியாக சென்ற ஈஸ்வரன் என்பவர் தங்களது கடையில் இருந்து துணிகளை ஆம்னி வேனில் மர்ம நபர்கள் இருவர் ஏற்றிக் கொண்டு இருப்பதாக கேசவனுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, அதிர்ச்சியடைந்த கேசவன் விரைந்து வந்து பார்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு துணிகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், திருடப்பட்ட துணிகளின் மதிப்பு சுமார் ரூ. 1 லட்சம் எனக் கூறப்படுகிறது. தகவலறிந்த அந்தியூர் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதுகுறித்த புகாரின்பேரில் அந்தியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News